Friday 18 September 2020

PRONOLOGY பெயர் ஜாதகம் எப்படி அமைப்பது என்பதை பற்றி பார்ப்போம்!


PRONOLOGY 

பெயர் ஜாதகம் அமைப்பது எப்படி?

முதலில் ஆங்கில எழுத்துக்களை வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள்.
 
A B C D E F G H I J K L M N 
1 2  3. 4. 5. 678. 9 10 11 1213 14
O P Q R S T U V W X Y Z 
15 16 118 19 20 21 22 23 24 25 26
ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் கீழே அதன் வரிசை எண்ணை எழுதிக்கொள்ளுங்கள்.
 A 1, B 2, C 3 என வரிசையாக யாக எழுதிக்கொள்ளுங்கள்.
 இறுதியில் Z  26. ஆக வரும்.
 இந்த  எண்  அட்டவணையை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அல்லது  தனியாக எழுதிக்கள்ளுங்கள்.

 இது பெயர் ஜாதகம் அமைக்க  ஒரு  முக்கிய அம்சமாகும் .
இப்போது ஒருவரின் பெயரை, எப்படி பெயர்ஜாதகத்தில் இணைப்பது என்று பார்ப்போம் .

ஒரு அன்பரின் பெயர் L NANDAKUMAR  நந்தகுமார் என்போம் .இவரது பெயர் ஜாதகத்தை எப்படி அமைப்பது என்று பார்ப்போம்!

பெயரின் இனிசியல் L ஆனது 12 ஆம் எழுத்தாக வரும். எனவே பெயர் ஜாதக கட்டத்தில் பன்னிரண்டாம் இடத்தில் L எழுத்தைக்  குறிக்கவும்
 .
அடுத்து N எழுத்தின் வரிசை எண்ணானது  14 ஆகும்.  இதில் ஒன்பது 9 ஐ கழித்துக் கொள்ள வேண்டும்.மீதி உள்ள 5 ஐத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும.

இப்போது N  என்ற எழுத்தை, மீனத்தில் இருந்து ஐந்தாம் இடமான கடகத்தில்  எழுதிக் கொள்ளவும்.  A என்பது முதல் எழுத்தாக இருப்பதால் ,அதை கடகத்திலேயே  எழுதிக்  கொள்ளவும்

 .பிறகு N  என்ற எழுத்தை முன்பு மாதிரி  கடகத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் அதாவது விருச்சிகத்தில் எழுதிக் கொள்ளவும்  (14--9==5).அடுத்து உள்ள D  எழுத்தை, அதற்கு நான்காம்  இடத்தில்  (D=4)அதாவது கும்பத்தில் எழுதிக் கொள்ளவும். காரணம் D என்பது, எழுத்துக்கள் வரிசையில் நான்காவது எழுத்தாகும் .பின்பு A எழுத்தையும்  கும்பத்தில்  எழுதிக் கொள்ளுங்கள்.

.அடுத்து K  எழுத்தை இரண்டாம் இடமான   மீனத்தில் ( K எழுத்து வரிசையில் 11 ஆகும்.11--9==2) குறிக்கவும்.அடுத்து   U எழுத்தை ,அதன் மூன்றாவது இடமான ரிஷபத்தில்  எழுதிக் கொள்ளுங்கள்.காரணம் U எழுத்து ஆங்கில எழுத்து வரிசையில் 21 ஆகும். அதில் 18ஐ  கழிக்க, மூன்று வரும் (21--18==3).எனவே இதை ரிஷபத்தில்   குறிப்பிட வேண்டும். 

அடுத்து M  என்ற எழுத்தை , ரிஷபத்தில்  இருந்து நான்காம் வீடான சிம்மம்  இராசியில் எழுதி  வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் M என்பது பதிமூன்றாம் எழுத்தாகும்.
 

அதில் ஒன்பது கழிக்க நான்கு வரும்(13 --9==4) .எனவே M  எழுத்தை   ரிஷபத்திலிருந்து 4 ம் இடமான சிம்ம ராசியில் குறிக்க வேண்டும் .

அடுத்து உள்ள A எழுத்தை முதல் இடத்திலேயே அதாவது  சிம்மத்தில்  குறிக்க வேண்டும் .

அடுத்து உள்ள R  எழுத்தை சிம்மத்திலிருந்து‌ 9 ஆம் இடமான மேஷ  ராசியில் (18--9==9) குறிக்க வேண்டும்.காரணம் R , எழுத்தின்   வரிசை எண் பதினெட்டாகும் .இதில் ஒன்பதைக்  கழித்தால் ஒன்பது கழித்தால்  9 வரும். எனவே சிம்மத்திலிருந்து  இருந்து ஒன்பதாம் இடமான மேஷத்தில்  அந்த எழுத்தைக் குறிக்க வேண்டும் .

இதுவே எல் நந்தகுமார்  L NANDAKUMAR என்பவரின் பெயர் ஜாதகம் ஆகும் .இந்தப் பாடத்தை நன்கு படியுங்கள். அதாவது ஒரு எழுத்தின் எண்  வரிசையை, முதல் எழுத்தின் (1) இடத்திலிருந்துதான்  கணக்கிட வேண்டும் .இதுதான் முக்கியமான விஷயம்.
இந்தப் பெயரின் பயன்களை எப்படி அறிவது என்பதை பற்றி நாளை பார்ப்போம் இது மிகவும் முக்கியமான அத்தியாயமாகும் பல தடவை படித்து மனதில் நிறுத்திக் கொள்ளவும் 

நாளை சந்திப்போம்