Monday 14 September 2020

PRONOLOGY பெண்களின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும் 2


PRONOLOGY

பெண்களின் பெயர்களும் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் 2

ஒரு ஆண் கல்வி கற்றால் அவர் மாத்திரம்தான்  அறிவாளி ஆகிறார். ஆனால் ஒரு பெண் கல்வி கற்றாலோ அவளது குடும்பமே  கல்வியாளர்களாக  மாறிவிடுகிறது. எனவே ஆண்களைவிட  பெண்களே பலவகையிலும் திறமைசாலியாக இருப்பதைப் பார்க்கலாம். 

ஆனாலும் பல திறமைசாலியான பெண்கள், குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக  இருப்பதில்லை. பல வகைகளிலும்  கஷ்டப்படுகிறார்கள் .

அதற்கு அவர்களின் பெயர்கள் தான் காரணம் என்று நேற்று பார்த்தோம். மேலும் பல பெண்களின் பெயர்கள் அவர்களுக்கு கடுமையான தோஷத்தை கொடுத்து விடுகின்றன. அவர்களது  வாழ்க்கையை கஷ்டமாக்கி விடுகிறது.இங்கு  சொல்லப்படுவது எல்லாம் பொதுபலன்களே.

 ஆனால் 75 சதவீத பெண்களுக்கு நடைமுறையில் ஒத்து வருகிறது . நீங்களும்  ஆராய்ந்து பார்க்கலாம்.

KAMALA VIMALA NIRMALA MALATHI

இந்த மாதிரியான பெயர் உடைய பெண்கள், ஆண்களுக்குச் சமமாக எல்லா துறைகளிலும் விளங்குவார்கள் . பலர் ஆண்களைவிட அதிக திறமையும், அதிக சம்பளமும்  பெறுகிறார்கள் .குடும்பப் பெண்ணாக இருந்தால் , குடும்பத்தின் நிர்வாகம் இவரது கையில் இருக்கும். இவர்களிடம் பெண்மையின் நளினம் குறைந்து ,ஆண்மை குணங்களின் தன்மை காணப்படும், இவர்களுக்கு  தாம்பத்திய/குடும்ப  சுகத்தை விட ஆண்களைப் போன்று சாதனைகள் படைப்பதிலும் குடும்பம் அல்லது நிறுவனங்களை நடத்துவதிலும் ஈடுபாடு அதிகமாக இருக்கும் .

இவர்கள்தான் தங்களது  கணவனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்வார்கள். கணவன் இவர் சொல்லை கேட்காமல் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகிறது.

 இந்தப் பெயர கொண்ட பெண்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன ?மேலே கண்ட அனைத்து பெயர்களிலும்" MALA " என்ற எழுத்துக்களின் ஒலிச்சேர்க்கை உள்ளது.MAL  என்றால் MALE என்ற சேர்க்கை ஒலி  உண்டாகிறது .எனவே ஆண்களுக்கு உரிய தன்மைகள்  அதிகமாகிறது. மேலும் ஆண்களின் பெயர்கள்  RAMANராமன் VIMAL விமல் என்று வந்தால் அவர்களின்  திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகின்றன
மணமுறிவுகள் வரை கோர்ட்டுக்கு சென்று விடுகின்றன. 

SUDHA,SUSHILA  SUJATHA SUGUNA SUNDARI

இந்தப் பெயர் கொண்ட பெண்களும் தங்களது குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.இவர்கள்  அறிவும் திறமையும் அதிகம் உடையவர்கள்தான். ஆனாலும்  தான் என்ற கர்வம்  இருக்கும். இதனால் கணவருடன்
 இணங்கிப்  செல்ல மாட்டார்கள். கணவன் எது செய்தாலும், அதில் குற்றத்தை கண்டுபிடிப்பார்கள் .காரணம் இல்லையே கணவணிடம் கோபம் கொள்வார்கள்.  காரணம் பெயரிலுள்ள "  SU "என்ற ஒலி  தொகுப்புதான். SUE  வழக்கு தொடுத்தல், குற்றம் சுமத்துதல் என்று அர்த்தம்.

 நாளிதழ்களில
தினமும் வரும் ஆண் பெண் பிரச்சனைகள் ,குடும்பத் தகராறுகள் ,மணமுறிவுகள் போன்றவற்றுக்கு, இந்தப் பெயர் உள்ள உள்ள பெண்களும், ஆண்களுமே காரணமாக இருப்பார்கள். 

இவர்கள் தங்களது பெயர்களை எவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்கிறார்களோ ,அவ்வளவு சீக்கிரம் அவர்கள் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

மேலே சொன்ன பலன்களெல்லாம் பெண்களுக்கு பொதுவானது. 75 சதவீதம் வரை பெண்களுக்கு பாதிப்பை தரும். இப்போதே மாற்றிக்கொள்வது நல்லது
 

இன்று இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் நிச்சயம் மனப் பிரச்சனைகளை கொடுத்துவிடும்.

நாளை சந்திப்போம்