Friday 18 September 2020

PRONOLOGY உங்கள் விதியை மாற்றக்கூடிய உங்கள் விதியை மாற்றக்கூடிய பெயர் ஜாதகம் .நேம் சார்ட்,(NAME CHART)

PRONOLOGY

பெயர் ஜாதகம்__ உங்கள் பெயரின் புதிய கோணம்!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதகம் என்பது பிறவியிலேயே அமைந்து விடுகிறது .அந்த; ஜாதகர் பிறந்தத நேரத்தில் இருந்த கிரகங்களின் கோச்சார நிலையே ஜாதகம் எனப்படுகிறது. .

ஜாதகத்திலன் முக்கியத்துவத்தை இக்காலத்தில் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இதில் ஜாதி, இன, மத பேதம் இல்லாமல் அனைத்து இன மக்களும் தங்களின் ஜாதகத்தையும் ,தங்களது குடும்பத்தாரின் ஜாதகங்களையும் குறித்து வைத்துள்ளனர். இது மிகவும் பாராட்ட கூடிய மஒன்றுதான் .

ஆனால் இந்த ஜாதகம் எத்தனை பேருக்கு சாதகமாக இருக்கும்! என்று சொல்ல முடியாது .உலகத்தில் இதுவரையிலும் பிறந்த கோடிக்கணக்கான மக்களுக்கும் சரி, இனிமேல் பிறக்க இருக்கின்ற மனிதருக்கும் சரி ,யாருக்குமே ஒன்பது கிரகங்களும் நன்மை செய்யாது!

 ஏன்? தெய்வங்களே மனிதனாக பிறக்கும் பொழுதும், சில கிரகங்கள் பாதிக்கப்பட்டன . அவர்களும் மிகவும் துன்பங்களையே அனுபவித்தனர்.

எனவே ஜாதகத்தின் விதியை மாற்ற முடியாது. ஆனால் உங்களுக்கு ஒன்று ஒரு பெயர் உள்ளது. அந்தப் பெயரை நியூமராலஜிப்படி மூலம் சிறப்பாக அமைத்துக் கொள்ளும்போது உங்கள் வாழ்க்கை நன்கு அமையும். 

உங்கள் ஜாதகம் சிறப்பாக இல்லாவிட்டாலும், பெயர் ஜாதகம்  மட்டும் நன்கு அமைத்து விட்டால் ,பின்பு உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி தான். 

ஜாதகம் என்றால் என்ன? ஜாதகம் என்பது கிரகங்களின் அமைப்பைக் குறிப்பதாகும்.

ஆனால் இந்த புதிய பெயர் ஜாதகம்(NAME CHART) என்பது மிகவும் சிறப்பானது. இதை நமது விருப்பத்திற்கு ஏற்பமாற்றிக்கொள்ள முடியும். பெயரை மாற்றுவதன் மூலம் நமது வாழ்க்கையே மாற்றிவிடலாம்.
 
மனிதனின் ஜாதகத்தில் நவக்கிரங்கள், அவைகளின் இயக்கத்தின் படியே குறிக்கப்பட்டிருக்கும். 

ஆனால் பெயர் ஜாதகத்தில், ஆங்கில எழுத்துக்களில் உள்ள  26  எழுத்துக்களும் ஒரு குறிப்பிட்ட கணித முறையில் பெயர் ஜாதகத்தில் குறிக்கப்படும். 

இதுவும் மேசத்தில்  இருந்துதான் 12 வீடுகளை  எடுத்துக்கொள்ளவேண்டும். .
மேஷம் முதல் வீடு , ரிஷபம் இரண்டாம் வீடு, மிதுனம் மூன்றாம் வீடு என்று வரிசையாக மீனம் பன்னிரெண்டாம் வீடு என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .

இதில் உள்ள 12 வீடுகளிலும் நமது பெயரின் எழுத்துக்களை  நிரப்ப வேண்டும் .எந்தெந்த ராசிகளில் எழுத்துக்கள் நிரம்பியுள்ளதோ  அவை நற்பலன்களை ஏற்படுத்தும். 

எந்தெந்த ராசியில் எழுத்துக்கள் இல்லையோ அந்த ராசி அல்லது அந்த காரகத்துவம் மனிதனுக்கு குறைவு படுகிறது..

ஆங்கில எழுத்துக்கள் 26-ம் மிக பலம்வாய்தவை. ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும்  ஒரு கிரகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ஒரு பெயரை  பெயர் ஜாதகம் முறையில் அமைக்கும்போது ,ஒரு ராசியில் எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ, அத்தனை கிரகங்களும் அங்கு இருப்பதாக கொள்ள வேண்டும்.பெயர்  ஜாதகப்படி நல்ல எழுத்துக்கள் அமையும் ராசிகள், நல்ல பலன்களை கொடுக்கும், தீய  எழுத்துள்ள ராசிகள் தீய பலன்களைக் கொடுக்கும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

படத்திலுள்ள ராசி கட்டத்தை பாருங்கள். இதன்படியே ஒரு ராசி கட்டத்தை நீங்கள் வரைந்து கொள்ள வேண்டும். பிறகு உங்களது ஜாதகத்தை உங்களது பெயரை  தனியே எழுதிக் கொள்ளுங்கள். பெயரில்  உள்ள எழுத்துக்களை இந்த கட்டத்தில்  வரிசைப்படி நிரப்ப வேண்டும்.

 இது மிக மிக முக்கியமான அத்தியாயம். இது என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. அற்புத பலன்களை அளிக்கக் கூடியது. முதலில் உங்களுக்கு அமைப்பது சற்று சிரமமாக இருந்தாலும் பிறகு நன்கு பழகிவிடும் .உங்களதுபுதிய பெயரின் பலன்களை  நீங்களே அறிந்து கொள்ளலாம் .இதை அமைப்பது எப்படி? என்பது பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்