Tuesday 15 September 2020

PRONOLOGY பெயிரின் பலன்களை அறிவது எப்படிஃ?


PRONOLOGY

ஒரு  அன்பரது பெயரின் பலன்களை அறிவது எப்படி?

இது மிகவும் முக்கியமான அத்தியாயமாகும் 

.இதுவரையில் எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய  அத்தியாயம் இது. ஒரு பெயரின்  பலன்களை எப்படி அறிய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன ?என்பதுதான் இந்த அத்தியாயத்தின் குறிப்பிடத்தக்க விஷயம். 

ஒரு பெயரைச் சொன்னவுடன் அதன் பலன்களை அறிவது எப்படி ?என்று ஆய்வு  செய்வதுதான் இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும் 

.நீங்கள் ஒரு பெயரைச் சொன்னவுடன், அந்தப் பெயரின் பலன்களை சொல்வதற்கு அந்தப் பெயரை  தனியே நீங்கள் எழுதிக் கொண்டு, அதன் எண்களை கூட்டி கணக்கிட  வேண்டும் ..மேலும் நிச்சயமாக  பலன்கள் எண்கணிதம் மூலம் சொல்ல முடியாது (Numerology). 

பெயர் எண்களின் மூலம்   சில பலன்களை கூறலாம்.ஆனால்PRONOLOGY  முறையில் ஒரு பெயரைச் சொன்னவுடன், அந்தப் பெயரில் உள்ள ஒலிகளை ஆராய்ந்து, உடனடியாக பலன்களைச் சொல்ல முடியும் . எப்படி? நீங்கள்  யாருக்கும்  பலன்களை சொல்ல முடியும் .எனவே இந்த அத்தியாயத்தை பலதடவை படித்து  புரிந்து கொள்ளுங்கள்

உங்களை தேடி  ஒரு  நண்பர் வருகிறார். அவரது பெயர் கே இராமலிங்கம் என்போம் .அவரது பிறந்த தேதி 11 9 2001 என்பதாகும். இப்போது எண்கணிதப்படி இவரது பலண்களை பார்ப்போம்.

 பிறந்த தேதி எண் 2 மற்றும் விதி எண் 5
 
நீங்கள் இப்போது ஒரு தேதிக்கு பிறவிஎண் மற்றும் விதி  எண்களை  கண்டுபிடிக்கும் முறையை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

K RAMALINGAM
2  214  1 3 15314===27==9
இவரது பிறந்த தேதி
11 9. 2001 எண்கள்
2 +9+2+0+0+1==14==5.

எண்கள் 2 & 5.

இவர் பிறந்த தேதியின் என்எண்களின் பலனை  NUMEROLOGY மூலம் சொல்லிவிடலாம் .இதற்கு உங்களுடைய எண் கணிதத்தில் ஆளுமை முக்கியம். பிறந்த தேதி எண்  இரண்டின் (2) பலனகளையும், அதாவது சந்திரனின் குணங்களையும் , மற்றும் விதி எண் 5 புதனின பலன்களையும் சேர்த்து நீங்கள் அவருக்கு சொல்லிவிடலாம். 
ஆனால் ஆனால் பெயரின் பலன்களை எப்படி 
சொல்வது? என்பதுதான் மிக முக்கியமாகும்.


 இவரது பெயர் எண்  27 வருகிறது.  27 என்ற எண்
நல்ல பெயர் எண் தான். .நல்ல பையன் தான் ஆனாலும் இந்தப் பெயர்  எண்  9 இல் வருகிறது. அவர் பிறந்தது இரண்டாம் தேதி. எனவே 9 என்ற இந்த பெயர்எண் அவருக்கு  பல பாதிப்புகளை கொடுக்கும் . காரணம் எண்கணிதம் படி 2 ம் எண், 9ககு எதிரிடையானது.

இப்போது கே ராமலிங்கம் என்ற பெயர் உள்ளவர் எப்படி இருப்பார்? என்பதுதான் நமது ஆராய்ச்சி 

.பெயரை தனியே எழுதிக்கொள்ளுங்கள்

K R A M A L I N G A M    

இந்தப் பெயரை  இரண்டு எழுத்தாகவும், 3 எழுத்துக்களாகும் பிரித்துக் கொள்ளுங்கள் .அப்படி பிரிக்கும் பொழுது அதற்கென்று ஒரு அர்த்தம் வரும் .அந்த அர்த்தத்தை குறித்துக்கொள்ளுங்கள்

K R + RAM +MAL +LING+ GAM
என்று ஒலிகளாகப் பிரிக்கலாம். 

இப்போது அந்த குறித்த எழுத்துக்களை  சேர்த்து  படிக்கவும். ஆங்கில எழுத்துக்களில் உயிர் எழுத்தான A E I O U  என்ற எழுத்துகளில் ஒன்றை பயன்படுத்தி,  அதை  முழுவதுமாக இணைத்து பார்க்கவும். ஒலித்து பார்க்கவும்.

 உதாரணமாக K R  என்பது  CARE  ஏன்று ஒலிக்கப்படும் .RAM என்பது RAM (ஆண் ஆடு) என்று ஒலிக்கப்படும் .MAL என்பது  MALE  என்று ஒலிக்கப்படும்.LING  என்பது LINK (தொடர்பு ),அதாவது தொடர்பு படுத்துதல் என்று பொருள்படும். இறுதியில் GAM  என்பது  GAME என்று ஒலிக்கப்படும். 

இப்போது இந்த சொற்களின்  பலன்களை  அந்த பெயருக்கு கொடுத்து பார்க்கவும். பொருத்திப் பார்க்கவும். அவருடைய குணங்கள், வாழ்க்கை பாதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அதாவது கே ராமலிங்கம் என்பவர் மிகவும் ஜாக்கிரதையானவர். உஷாரான மனிதர். எதிலும் கவனமாக இருப்பவர். மேலும் RAM  என வருவதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் (ஆண் ஆடு)செயல்படுபவர்கள் . எப்போதும்  அலைந்து கொண்டே இருப்பார் . மேலும் காரியவாதி. மேலும் தன்னம்பிக்கை உடையவர்
 தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உடையவர். LING வருவதால் மக்களுக்கு மிகவும் நன்மை செய்பவர் .அனைவரிடமும் நன்றாக நன்கு பழகுபவர்.மக்களும் இவருடன் சென்று நன்கு பழகுவார்கள்.இதனால்  மக்கள் செல்வாக்கு வந்து விடும் .GAM(GAME) என்று பெயர் முடிவதால் இவர் அனைத்தையும் சிரமப்படாமல் செய்வார். அவர் செய்யும் செயல்களில் தீவிரம் இருக்காது அதனால்
சில சமயங்களில் ஏமாற்றங்களையும் சந்திப்பார். 

பிறந்த தேதிகளின் எண்கள் (2 &5)இவருக்கு பேச்சு திறமையும் புத்திசாலித்தனத்தையும் கொடுத்தாலும், பெயர் எண் 9  எதிரிடையாக இருப்பதால் பல காரியங்கள் முழுமை அடைய முடியாது .பொருளாதாரத்தில் ஏமாற்றங்கள் இருக்கும் 
 இவரது  பெயர் எண்ணை மட்டும் சரி செய்து, நல்ல எண்ணில்  வைத்துக் கொண்டால் இந்த பெயரே நல்ல பலன்களை கொடுக்கும் .

ஒவ்வொருவரும் தங்கள் பெயரை இதுமாதிரி பிரித்து பலன்களை அறிந்து கொள்ளலாம்.

 நல்ல பெயர் வைப்பதற்கு எப்போதும் ஆசிரியரை அணுகலாம்.

வாழ்த்துக்கள்
நாளை சந்திப்போம்