Thursday 13 August 2020

PRONOLOGY உருவாக்கியது எப்படி?


PRONOLOGY உருவானது  எப்படி?

நான் விவசாயக் கல்லூரியில் (B.E.Ag.)படித்த காலத்திலேயே (1977) ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டு படித்தேன்.எண்கணித்திலும்  ஈடுபாடு கொண்டு  பயின்றேன். 

 இதன் மூலம் நண்பர்களுக்கும்,  ஆர்வத்துடன் தேடி வந்தவர்களுக்கும்   எண்கணிதம் மூலம் பெயர் மாற்றிக் கொடுத்தேன். இதனால் பலர் வெற்றி பெற்றார்கள். சிலர்  வெற்றி பெறமுடியவில்லை.

குறிப்பிட்ட பிறந்த தேதியில் பிறந்தவர்களுக்கு ,  நல்ல எண்ணில்  பெயர் வைத்து கொடுத்தாலும் ,பலவித காரணங்களால் அவருக்கு நல்ல பலன்களை அடைய முடியாமல் போய்விட்டது. 

எனது பெயர் மாற்றம் அவர்களுக்கு  நன்மை செய்ய வில்லையே  என்ற கவலையில், தீவிரமாக  ஆராய்ந்தேன். அதற்கான காரணங்கள் என்ன ?இந்த அடிப்படை எண்களுக்கு (பிறவி எண் ,விதி எண் ) இந்த பெயர் எண்ணில் தான் பெயர் வைக்க வேண்டும் என்றும் எண்கணிதம் கூறுகிறதே என தீவிரமாக ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.


பெயர்களை பற்றிய ஆராய்ச்சிகளில்  பத்து வருடங்களுக்கு மேல்  ஈடுபட்டேன். பல ஆயிரம் பெயர்களை ஆராய்ந்தேன். மனைவியின் வசவுகளைப் பாராமல், இறைவனை வேண்டி எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன் .அப்போதுதான் எதார்த்தமாக ON,NO  என்ற சொற்களை ஆராய வேண்டி வந்தது .அப்போதுதான்  இறைவன்  வழியை காட்டினார் .
இதன்மூலம் PRONOLOGY  கலை உருவானது. இதற்கு  குருவருளும் திருவருளும் தான் காரணம்.

என்னை மிகவும் சிந்திக்க வைத்த  விஷயம்
இதுதான். ஆங்கிலத்தில் O,N என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளன. இது இரண்டு விதமாக இணையும்.

 ஒன்று  ON ,இன்னொன்று NO . இவற்றின் எண் மதிப்பை  பார்க்கும்போது,இரண்டும் 12  (5+7)தான் வரும் .ஆனால் ON என்பது  நேர்மறை ஒலியையும் .NO  என்பது எதிரிடையான ஒலியையும் குறிக்கும் 
இந்த  ஒலிகளின் பலன்களை பெயர்களில் பொருத்திப்பார்த்தேன். மிகவும் அற்புதமாக ஒத்துப் போனது.

 இது மட்டுமல்ல நாடுகளின் பெயர்கள் , புராணங்களில் வரும் பெயர்கள், சுற்றியுள்ள மக்களின் பெயர்கள்... இப்படி எல்லாவற்றையும்  ஆராய்ந்து பார்க்கும் பொழுது ,மிகப்பெரிய உண்மை புலப்பட்டது .இதுவரையிலும் ,ஒலிகளைப் பற்றி யாரும் ஆராயவில்லை.
 எனவே  ஒலிகளை மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து  PRONOLOGY கலையை ,இன்று ஒரு முழு அளவிலான சாஸ்திரமாக உருவாக்கியுள்ளேன் .

பெயர் எழுத்துக்கான  வயது 
விபரங்கள் ,
எழுத்துக்களுக்கான காலம், மேலும் , பெயர்களின்  மூலம் திருமண பொருத்தம் ,மேலும் பெயர்களின் 
ஜாதகம் (NAME CHART) இவைகளை யெல்லாம் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடித்தேன் முழுமையான சாஸ்திரமாக உருவாக்கியுள்ளேன்.. . 

இந்த புத்தகங்களை வெளியிடுவதற்காக பல பதிப்பகங்கள்  சென்றேன். அனைவரும் முதலில் மறுத்தனர் .பின்பு அவர்களின் பெயர்களின் பலன்களை  கூறும் பொழுது, அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு , இந்த புத்தகங்களை வெளியிடுகிறோம் என்று கூறினார்கள். இன்று  PRONOLOGY  புத்தகம் பல பதிப்புகள் வந்துவிட்டன .

மேலும் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. எண் கணிதம்  எதிர்பார்த்த பலன்களை கொடுப்பதில்லை   என்பதற்கான  விளக்கங்களை இது கூறுகிறது .இது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒரு PRONOLOGY துறையில் குஜராத் பல்கலைக்கழகம் எனக்கு முனைவர் என்ற பட்டத்தை வழங்கி உள்ளது

எண்கணிதம் எண்கள் கொண்டு மட்டுமே அமைக்கும் பெயர்கள் பாதி  வெற்றியைத்தான்  தரும். ஆனால் நியூமராலஜி மற்றும்  புரோனலஜி  கொண்டு அமைக்கப்படும்  பெயர்கள்  நிச்சயம்  முழு (95%)பலன்களைத் தரும்.