Thursday, 24 September 2020

PRONOLOGY பெயர் ஜாதகத்தின் பலன்களை அறிவது எப்படி


PRONOLOGY

  பெயர் ஜாதகத்தின் பலன்களை அறிவது எப்படி?

நேற்று (எல் நந்தகுமார்) L NANDAKUMAR அவர்களின் பெயர் ஜாதகத்தை அமைத்தோம். ஒரு தடவை அதை மீண்டும் படித்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த ஜாதகத்தின்  பலன்களை பார்ப்போம். 

முதல் ராசியில் அதாவது மேஷ ராசியில் R  எழுத்து உள்ளது. R  என்ற எழுத்தானது ,வேகமானது பலம் வாய்ந்தது .ஆக்ரோஷம் நிறைந்தது .எனவே இது  மேஷ லக்னத்தில் R   இருபாபதால் , இவர்  வேகமானவர் துடிப்பானவர் ,எதையும் செய்ய நினைப்பவர் .திறமையும், தன்னம்பிக்கையும்  உண்டு. 

அடுத்ததாக இரண்டாம் இடமான ரிஷபத்தில் U  என்ற எழுத்து உள்ளது. இதனால்  அறிவு ,திறமை ,பேச்சு திறன் இருக்கும் . பேச்சின் மூலம் பல காரியங்களை சாதிப்பார் . இரண்டாம் இடமாக இருப்பதால், பணமும் வந்து சேரும் .இது நல்லதுதான்.
 
மூன்றாம் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இல்லை .எனவே வீரம் தைரியம்  குறைவு படுகிறது. அடுத்து நான்காம் இடமான கடகத்தில் NA  என்ற இரண்டு எழுத்துக்கள்  இருப்பதால், இவருக்கு கல்விச்செல்வம் உண்டு. வீடு , வசதிகள்  உண்டு. 

ஆனால் NA  என்பது இல்லை  ,(NO)என்பதை குறிப்பதால், கல்வி மற்றும் வசதிகளில் குறைபாடுகள் உண்டு. அல்லது அதிக  அளவுக்கு முடியாது அல்லது அனுபவிக்க முடியாது. 

அடுத்ததாக ஐந்தாம் meஇடமான சிம்மத்தில் எம் ஏ (M A) மா என்று  இருப்பதால் இவர் இரக்க குணம் படைத்தவர் .எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொள்வார்(MAM). இது நல்ல நிலையாகும். 

அடுத்து  6  7 ஆகிய கட்டங்களில் (கிரகங்கள்)
 எழுத்துக்கள் இல்லை. எனவே அந்த ஸ்தானத்தின் பலன் குறைகிறது. மனைவி ஸ்தானம் பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் திருமணம் தடை ஆகலாம் .தாமதமாகலாம். 

அடுத்து எட்டாம் இடத்தில் N என் இருப்பதால் இவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும் .நடுவயதிற்கு மேல், கால் வலி ,வயிற்று வலி வர வாய்ப்புண்டு. 

அடுத்து ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் (9 ,10 )இடங்களில் எழுத்துக்கள் இல்லை. எனவே இவருக்கு பாக்கியஸ்தானம்  குறைவு படுகிறது. அதே போன்று தொழில் ஸ்தானமும் பாதிக்கப்படுகிறது. எனவே தொழிலில் பெரிய அளவில் முன்னேறுவது தடுக்கப்படுகிறது. இவர் எனவே இவர் பெயரை சிறிது மாற்றி 9 ,10 இடங்களில் எழுத்துக்கள் வரும்படி  அமைத்தால் இவருக்கு யோகங்களும் நல்ல தொழில் வளமும்  உண்டாகும். ஜாதகத்தில் அவ்வாறு செய்ய முடியாது. 

எனவேதான் பெயர் ஜாதகம் மிகவும் வலிமை உள்ளதாக இருக்கிறது . நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எளிதாகவும் இருக்கிறது. 

அடுத்ததாக 11-ம் இடத்தில் கும்பத்தில் டி ஏ (DA)என்ற எழுத்துக்கள்  இருப்பதால் இவருக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். செய்கிற தொழில் பேரும் புகழும் கிடைக்கும். DA என்பது DAY பகல் என்று ஒலிக்கப்படும். எனவே தொழிலில் லாபம் பெரும் புகழ் இருக்கும் .

அடுத்து கடைசி இடமான மீனத்தில் எல் கே (L K)என்ற எழுத்துக்கள் இருப்பதால் வெளிநாட்டு தொடர்புகள் ஏற்படும் , பல  பயணங்களும் ஏற்படும். மேலும் அது சார்ந்த செலவுகளும் ஏற்படும் . விருப்பம் என்பது (LK)லைக் என ஒலிப்பதால், இவருக்கு  சுபவிரயங்கள்  ஏற்படும். 

பயணங்களுக்காக செலவு செய்வார் .மொத்தத்தில் இவருடைய பெயர ஜாதகம் நன்கு உள்ளது. எட்டாமிடம் பாதிக்கப்பட்டுள்ளது .மற்றபடி மற்ற நல்ல இடங்களான 1 2  4 5  11  12 இடங்களில்  எழுத்துக்கள் இருப்பதால் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பார். 

ஆனால் நந்தகுமார் என்ற பெயர் எதிரிடை ஒலியில் (NEGATIVE) இருப்பதால், நல்ல பலன்களை முழுவதும் அனுபவிக்க முடியாது. கல்வி. தொழில் ஆகியவற்றில்  பல பிரச்சினைகள்  ஏற்பட்டிருக்கும்.

 இந்த பெயரை மாற்றி, பெயர் ஜாதகப்படியும்  நல்ல முறையில் அமைத்துக் கொண்டால் . இவர்  நன்கு முன்னேறுவார் .இது மிகவும் முக்கியமான அத்தியாயம்.
 
ஒவ்வொருவரும் உங்களது பெயர் ஜாதகத்தை ஆராய்ந்து PRONOLOGY படி  பெயரை மாற்றி, பெயர் ஜாதகப்படி நல்ல இடங்களில் எழுத்துக்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.நீங்கள் நிச்சயம்  வெற்றி பெறலாம். அனைத்திலும்  வெற்றி பெறலாம் .

இது மிகவும் அற்புதமான ஒரு முயற்சி . அரிய  செயலாகும். நமது வாழ்க்கை நமது கையில். 
அதை  பெயர் ஜாதகம் மூலம் அடையலாம். இது நிச்சயம் பலன் தரும்.

 எனது புத்தகங்களில் பெயர் ஜாதகப்படி பிரபலமான மனிதர்களின் பலன்களை எழுதியுள்ளேன்.  PRONOLOGY சாஸ்திரம் என்ற என் புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

மேலும் உங்களது பெயர் மாற்றம் சம்பந்தமாக என்னை சந்திக்கலாம்.
 வாழ்த்துக்கள்.