Tuesday, 15 September 2020

PRONOLOGY குழந்தை கோளின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும்

PRONOLOGY

குழந்தைகளின் பெயர்களும் அவர்களது வாழ்க்கையும் ..

ஒவ்வொரு பெற்றோரின் கனவுகளும் ,தங்கள் குழந்தைகள்  நல்லபடியாக வளர்ந்து , சமுதாயத்தில் பெயரும் புகழும் அடைய வேண்டும்  என்பது அவர்களது ஆசை, விருப்பம் எல்லாமே .

வள்ளுவரும் சொல்லுகிறார் மகன் பிறந்த பொழுது இருக்கும்  மகிழ்ச்சியைவிட தன் மகனை சான்றோன் என்று புகழப்பட்டால்  தாய்  மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்  என்று சொல்கிறார்.

 அதாவது தன் மகனை
அறிவாளி, புத்திசாலி ,நல்லவன் என்ற மக்கள் பாராட்டும் போது  அவனின் 
தாய், தான்  மிகவும் பாக்கியசாலி என்று  தன்னைப் பற்றி மிகவும் பெருமிதமாக பேசிக் கொள்வார்.

 ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறதா? என்றால் இல்லை! காரணம் என்று ஆராய்வோம்.

 ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே !என்று கண்ணதாசன் பாடுகிறார் .அந்த குழந்தை நல்லவராவதும் ,தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே !என்றும் கூறுகிறார் .

அதாவது இறைவனால் படைக்கப்பட்ட எல்லா குழந்தைகளும் நல்லவர்களை! வல்லவர்களே.
 ஆனால்  தங்களின் தாயின் வளர்ப்புப்படியே அவர்களின் குணங்களும் ,செயல்களும் அமைகின்றன.

 மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது, அவை நல்ல பெயர்களா? கல்வியைத் தருமமா? வாழ்க்கையை தருமா? என்று யோசிப்பது இல்லை.
 
தங்களுக்கு பிடித்த பெயரை வைத்து விடுகிறார்கள் .பின்பு குழந்தை கஷ்டப் படும் பொழுதும், படிக்காமல் இருக்கும் பொழுதும், முரட்டுத்தனமாக இருக்கும் பொழுதும் ,தங்களை நொந்து கொள்கிறார்கள் .இது மிகவும் விளையாட்டு தரமானது .

மக்களுக்கு நன்கு யோசித்து  வெற்றியை கொடுக்கக்கூடிய பெயர்களை வைக்க வேண்டும் .அதை விட்டுவிட்டு ,அழகான பெயர்களையும் ,யாரோ ஒருவர் சொன்ன  அதிர்ஷ்ட மில்லாத பெயர்களையும் வைத்து விடுகிறார்கள் .

பின்பு அவர்கள் கஷ்டப்படும்போது மட்டும், தாங்கள் சரியான பெயர் வைக்க வில்லையோ? என்று சிந்திக்கிறார்கள் ,.இப்போது சில குழந்தைகளின் பெயர்களை பற்றி பார்ப்போம் .


LOKESH லோகேஷ்  NAVEEN நவீன் , NANSHAN நந்தன்   RAMESH ரமேஷ் , NANDAKUMAR ,நந்தகுமார் போன்ற பெயர்களை வைக்கிறார்கள். இவை அழகான பெயர்கள் தான். 

ஆனால் இந்த பெயர் உள்ள குழந்தைகள்  வாழ்க்கையில் மிகவும் சிரமப்படுகிறார்கள். கல்வியிலும் பல தடைகள் உண்டாகிறது. படிப்பில் கவனம்  குறைகின்றது. .ஆர்வங்கள்  குறைகின்றன. 

இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம் லோகேஷ் என்ற பெயரில் "LO "என்பது  LOW என் ஒலிப்பதால் 
 அவரகளுக்கு தன்னம்பிக்கை குறைவு ,கன்சன்ட்ரேஷன் குறைவு  உண்டாகும்.இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை .இதனால் கல்வி மற்றும் தொழிலில்  பாதிப்புகள் உண்டாகின்றன .மேலும்  NAVEEN நவீன் என்ற பெயரும் ,கல்வியில் ஆர்வத்தை குறைக்கக்கக்கடியது. மேலும் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகமாகும்.

RAMESH  ரமேஷ்,  SURESH சுரேஷ் என்ற பெயர்களெல்லாம் திறமை அதிகமாகும். கேள்விகள் நிறைய கேட்பார்கள் .ஆனால் கவனம் குறையும். அவர் முழு முயற்சிகள் எடுத்தால் நல்ல மதிப்பெண்களை வாங்கலாம் .

NANDAKUMAR 
நந்தகுமார்,NARESH  நரேஷ் போன்ற பெயர்களெல்லாம் எதிரிடை ஒலியில் ஆரம்பிப்பதால், அவர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். மேலும் கல்வியிலும் வாழ்க்கையிலும் சிரமப்படுகிறார்கள். ASWIN, ASWATH அஸ்வத் போன்ற பெயர்கள், கல்வி சிறப்பையும், தொழில் சிறப்பையும் ஏற்படுத்தும் .

உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால் அவர்கள் பெயர் காரணமாக இருக்குமோ? என்று ஒரு முறை சிந்தியுங்கள்! எனவே ஒவ்வொரு குழந்தைக்கும் அதிர்ஷ்ட பெயர் வைக்க வேண்டியது அவசியம். இது கல்விக்கு  மட்டுமல்ல ,வாழ்க்கையில்  ஆரம்பம் முதல் இறுதிவரை வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் .

எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தையை பற்றி சிந்திக்க வேண்டும். குழந்தைகளுக்காக சொத்துகளை சேர்க்கிறார்கள். ஆனால் பெயர்கள் நல்ல பெயராக வைப்பது இல்லை. நல்ல பெயர்தான்  அனைத்துக்கும் காரணம் என்பதை அறிவீர்களா?

 இதைப்பற்றி சந்தேகம் உள்ளவர்கள் இங்கு பதிவு செய்யலாம் .

நாளை விளக்கம் சொல்லப்படும்.
வாழ்த்துக்கள்..
 நாளை சந்திப்போம்..