Sunday, 6 September 2020

PRONOLOGY அதிர்ஷ்ட பெயர்கள் பலன் தருவது எப்படி?


PRONOLOGY
அதிர்ஷ்ட பெயர்க பலன்களை எப்படி தருகின்றன?

இது ஒரு முக்கியமான கேள்வி. நீங்கள் ஒரு நல்ல  பெயரை தேர்வு செய்து விட்டீர்கள். உங்களது பழைய பெயர் ஒலி சரியாக இல்லாத காரணத்தினாலும் ,நல்ல பெயர் எண் இல்லாத காரணத்தினாலும் ஒரு புதிய பெயரினை எண்கணித நிபுணர்  மூலம்  தேர்ந்தெடுத்து விட்டீர்கள்

 இந்த பெயர் எப்படி உங்களுக்கு வேலை செய்யும்? எனக்கு நன்மைகளை எப்படி ஏற்படுத்தும்? என்பது உங்களது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

 பெயர் மாற்றிக் கொண்ட ஒவ்வொருவருக்கும் முன்னால் நிற்பது இந்த கேள்வியே  ஆகும். நீங்கள் அதிர்ஷ்ட பெயராக  மாற்றினால் மட்டும் போதாது. ஏனெனில் அந்தப் பெயர் இப்போது தான் பிறந்திறக்கிறது.

 உங்களது பழைய பெயரை பிறந்ததிலிருந்து இன்று வரையிலும் இலட்சக்கணக்கான தடவை  பயன்படுத்தி வந்திருக்கிறீர்கள் .உங்கள் மனதிலும் ,பள்ளிகளிலும் அந்த பெயரே, அலுவலகத்திலும் நிலைபெற்றுள்ளது. 

.இதனால் அந்த பழைய பெயர்  உங்கள் உடல், மனம் இரண்டிலும் ஊடுருவி உள்ளது .எனவே நல்ல பலன்களை அடைய  வேண்டுமென்றால், நீங்கள் உங்களது புதிய பெயரை வலுப்படுத்த வேண்டும் .

அடுத்து பழைய பெயரை முடிந்த அளவு வெகு சீக்கிரமாக மறந்துவிட வேண்டும். அப்போதுதான் புதிய பெயரின்  எண்களும், ஒலிகளும், உங்களது ஆழ் மனதிற்குள் செல்லும் .


எப்போது புதிய பெயரினை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொண்டதோ, அன்றுமுதல் தான் புதிய பெயர் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
உதாரணமாக உங்கள் பெயர் ராமசாமி என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .

அந்த பெயர் இதுவரையில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் செய்யவில்லை. 
எனவே ஒரு எண்கணித நிபுணரை  அணுகுகிறீர்கள்.
 அவரும்  உங்கள் பெயரை "அஸ்வின் ராம் "ASWIN RAM ,,(23)என்று மாற்றி  இருக்கிறார் என்று  வைத்துக்கொள்வோம். 

இந்த புதிய பெயரானது நல்ல ஒலியில் இருந்தாலும், நல்ல பெயர் எண்ணில்  இருந்தாலும், உங்கள் உள்மனதிற்குள்  செல்ல வேண்டும். ஆனால்  உங்கள் உள்மனதில்  என் பெயர் "ராமசாமி "என்று பதிந்துள்ளது. அந்த பெயரை விரைவில் மறக்க வேண்டும் .புதிய பெயரின் ஒலிகள் ஆழ்மனதில் பதிய வேண்டும் . அதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன

அவை  என்னவென்று பார்ப்போம்!
உங்களது புதுப் பெயரை ஒரு நோட்டு புத்தகத்தில் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாயால் சொல்லிக் கொண்டு புது பெயரை (45,50..)எழுத வேண்டும் . CAPITAL LETTERS என்பது முக்கியமானது. 

அப்போது அந்த புதுப் பெயரானது சொல் மூலமும் ,எழுத்து மூலமும் ,கண் மூலமும் ,கை மூலமும், மூளைக்கு சென்றடகிறது .நான்கு வழிகளில் மூளைக்கு சென்றடைகிறதது.அப்போது மிக விரைவிலேயே உங்களது பெயரை  ஆழ்மனது  ஏற்றுக்க்கொண்டு விடுகிறது .

உதாரணமாக தற்காலத்தில் நீங்கள் ஏர்டெல் போனை பயன்படுத்துகிறீர்கள்என்று வைத்துக்கொள்வோம். 
திடீரென உங்கள் பகுதியில் ஏர்டெல் போன்கள்  வேலை செய்யவில்லை என்றால், உங்களால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது .உங்களுக்கு  அந்த  எண்  வேலை செய்யாது.
 
எனவே நீங்கள் வேறு ஒரு நிறுவனம் மூலம் ,ஜியோ என்று வைத்துக்கொள்ளுங்கள் .ஒரு புதிய  சிம் கார்டு வாங்கி ,அந்த சிம் கார்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அன்று முதல் அந்த போனிலிருந்து, ஜியோ எண் வழியாகத்தான் உலகத்தை தொடர்பு கொள்ள முடியும். 

பழைய ஏர்டெல்  எண்ஆனது  வேலை செய்யாது.இதுபோலவே உங்களது புதிய பெயரை உங்களது உடலுக்கு கொடுத்து விட்டீர்கள். பழைய பெயரை  நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் ,அது  தனது பலன்களை கொடுக்காது.

 எப்போது உங்களுக்கு புதிய பெயர  வலிமை அடைகிறதோ , அன்று முதல் உங்களுக்குள் புதிய எண்ணங்கள் ,புதிய செயல்கள் ,புதிய பாதைகள் உங்களது  வாழ்க்கையில் தோன்றும் .

குறிப்பாக 100 நாட்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு புதிய பெயரானது ஓரளவு வலிமை  பெற்றுவிடும்.அப்போது  சூழ்நிலைகள் மாறிவரும். 

மேலும் நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் புது பெயர் கொண்டு உங்களை அழைக்க வேண்டியது அவசியம் ."பழைய  பெயர்,பழையவாழ்க்கை ,,புதிய  பெயர் புதிய வாழ்க்கை "என்பதை நினைவில் வையுங்கள். 

அனைவரும் முதலில் உங்களது பெயரை ஆராயுங்கள். நல்ல பெயராக அமைத்துக் கொள்ளுங்கள் .அந்தப் பெயரினை தினமும் தொடர்ந்து வலுப்படுத்தி வாருங்கள் .நிச்சயமாக நீங்கள் நல்ல எதிர்காலத்தை அடையலாம் .
பழைய விதிகள், பழைய சகாப்தம் முடிந்துவிட்டது! என நம்புங்கள்.
 " இன்று புதிதாக பிறந்தோம்! என்பதே புதிய பெயரின் தாரக மந்திரம்!"

நாளை சந்திப்போம்..

Saturday, 5 September 2020

PRONOLOGY அதிர்ஷ்டப் பெயர்களின் முக்கியத்துவம்.


PRONOLOGY
அதிர்ஷ்டப் பெயர்களின் முக்கியத்துவம்

நாம் அனைவரும் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம். ஒவ்வொரு நாளிலும்  அதற்கேற்ற முயற்சிகளை செய்கிறோம். பெயர் என்பது நம்மை  இயக்கும் ஒரு அற்புதமான ஒலியாகும், மந்திர சாவி யாகும். .

அந்தப் பெயர் நன்றாக இருந்ததால்தான், நாம் வெற்றி பெற முடியும். 

உலகத்தில் பெரும்பாலோர் என்ன நினைக்கிறார்கள் என்றால்?  என் பெற்றோர்கள் என் மீது மிகுந்த பாசம் உள்ளவர்கள். அக்கறை உள்ளவர்கள் .எனக்கு நல்ல பெயரைத்தான் வைத்திருப்பார்கள் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார்கள். 

பெற்றோர்கள் அன்புக்கு பெயர் பெற்றவர்கள்தான். அவர்கள், அவருக்கு தெரிந்த  அறிவு வரையில் யோசித்து நமக்கு பெயரை வைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறதா ?சுமாராக இருக்கிறதா? என்று யாரும் ஆராய்வதில்லை.

உலக  வரலாற்றிலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் சரி ,பெயர் சரியாக அமையப் பெற்றவர்களே தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும் நல்ல பெயருக்கு (lucky name s) தங்கள் பெயரை மாற்றிக் கொண்டதால் தான் அரசர்களும் ,அரசியல்வாதிகளும், நடிகர்களும் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்கள் ,.விளங்ங்குகிறார்கள். 

பெயர் மாற்றுவதற்கும் அல்லது பெயரை சரி செய்வதற்கும்  வயது ஒன்றும் தடையில்லை. பல இளைஞர்களும், ஏன் ?ஓய்வு பெற்ற அன்பர்கள் கூட தங்களின் பெயர் மாற்றி வெற்றி பெற்றுள்ளனர் .

இனி உள்ள காலங்களிலாவது நல்ல அதிர்ஷ்டத்தையும் ,வாழ்க்கையில் வெற்றியும் பெற வேண்டும் என்பதே அவர்களின நோக்கமாக உள்ளது. எனவே நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, எந்த பாலினமாக இருந்தாலும் சரி , PRONOLOGY மற்றும் நியூமராலஜி படி பெயர் மாற்றி வெற்றி பெறுங்கள் .

அதேபோன்று உங்களது குழந்தைகளுக்கும் நல்ல பெயரை வைத்து ,அவர்கள் வெற்றிகரமாக வெற்றிகரமாக வாழ வழிகாட்டுங்கள்.

உலகில் பணக்காரர்களை வெற்றி பெற்றவர்கள் என்று யாரும்  சொல்வதில்லை. ,ஆனால் தங்கள்  சுய முயற்சியால் வெற்றி பெற்று, பணத்தையும் புகழையும் அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள்  என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
 அவர் நல்லவராவதும் தீய தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே "என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுகிறார். 

அது நிச்சயம் உண்மைதான் .சிறிது மாற்றங்கள் செய்து கொண்டால்,  அது சரித்திரம் ஆகிறது.
 அதாவது குழந்தை நல்லவராவதும் ,தீயவராவதும் அவரவர் பெயர்களின் சக்தியாலே  என்று இருக்க வேண்டும்.

 உலக சரித்திரத்தில் பெயரமாற்றி ,வெற்றி பெற்றவர்களை பார்ப்போம்.

அருண்மொழிவர்மன்.  சோழ இளவரசர்.இவர் தனது பெயரை ராஜராஜன் என்று பெயர்  மாற்றியவுடன் உலகத்தை வெல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

திரு ஜெங்கிஸ்கான் அவர்கள் (CHENGIS KHAN)உலகத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர். இவரது பழைய பெயர் ஜெங்கிஸ்  (CHENGIS) என்பதாகும் .செங்கிஸ்கான் என்ற பெயரை மாற்றிய உடன் தான அவரால் உலகத்தை வெல்ல முடிந்தது.

இளைஞர் முத்தையா அவர்கள் தனது பெயரை கண்ணதாசன் மாற்றிய பின்புதான், பெரிய கவிஞராக ஒரு பிரகாசிக்க முடிந்தது.

விஜய் ராஜா என்ற இளைஞர் தான், "விஜயகாந்த் "என்று தனது பெயரை மாற்றிய உடன் தமிழ்நாட்டில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்தார்

திரு சிவாஜி ராவ் என்ற இளைஞர்  தான்  "ரஜினிகாந்த்" என்று பெயர் மாற்றிய உடன் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக வளர முடிந்தது.

பேச்சிமுத்து என்ற இளைஞர் தான்  O P பன்னீர்செல்வம் என்று பெபரை  மாற்றியவுடன் ,தமிழக அரசியலில் வெற்றி பெற்று  முதலமைச்சராக முடிந்தது

செல்வி கோமளவள்ளி அவர்கள் தனது பெயரை ஜெயலலிதா என்று பெயர் மாற்றிய பிறகு தான் சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆள முடிந்தது.

திரு தட்சிணாமூர்த்தி என்ற இளைஞர் தான் எம் .கருணாநிதி என்று பெயர் மாற்றிய உடன் வேகமாக வளர்ந்து ,அரசியலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டை பல வருடங்கள் அளவும்  முடிந்தது.

உலகத்தில் பல  நாடுகள் கூட,  தங்களது  நாட்டின் பெயர்களை மாற்றி வெற்றி பெற்றுள்ளன

தமாசிக் என்ற  நாடு "சிங்கப்பூர் "என்ற பெயர் மாற்றிய உடன மிக வேகமாக வளர்ந்து, இன்று வளமான நாடாக விளங்குகிறது.

மலாயா  என்ற நாடு "மலேசியா "என்று பெயர் மாற்றியவுடன் பல முன்னேற்றங்களை அடைந்து உள்ளது.

 பர்மா என்ற நாடு, தனது பெயரை" மியான்மர் "என்று மாற்றிக் கொண்டது .தவறான பெயர் காரணத்தால் இன்றும் மியான்மர் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டுள்ளது.

இதேபோன்று சிலோன் என்ற நாடும் "ஸ்ரீலங்கா" என்று பெயர் மாற்றியவுடன் பல சோதனைகளை சந்தித்து வருகிறது.

பெயர் மாற்றுவது என்பது மனிதர்களின் அல்லது நாடுகளின் விதியை மாற்றுவது என்பது ஆகும். 

மனிதர்கள் தங்களுக்கு  பெயரை மாற்றிக் கொள்ளும்போது, நல்ல நல்ல எண்கணித நிபுணர்களை அணுக வேண்டும். ஆனால் நாடுகள் பெயர் மாற்றும் போது அதில் வல்லுநர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். இல்லையெனில் அந்த நாடு பல வேண்டாத பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

மனிதனின் வாழ்க்கையை இரண்டு சாஸ்திரங்கள் தீரீமானிக்கின்றன.. ஒன்று ஜாதகம் .2 எண் கணிதம்.   இந்த இரண்டும் மனிதனின் வாழ்க்கையை 50  :50 சதவீதமாக ஆட்கொள்கிறது.

 நாம் எதற்கெடுத்தாலும் ஜாதகத்தையே அலசி ஆராய்கிறோம். அதனால் நமக்கு பாதி உண்மையே வெளிப்படுகிறது. பெயரில் என்ன இருக்கிறது? என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம் .இதுதான் மக்களின் தோல்விக்கு காரணம்.

 இறைவன் அனைவரையும் சமமாகத்தான் படைத்துள்ளார். ஆனால் நாம்தான் ஒன்றை பின்பற்றி ,மற்றொன்றை  அலட்சியம் செய்துவிடுகிறோம். 
இதனால் முழுப் பலன்களை மக்கள் அடைய முடியாமல் போகிறது .

வாழ்க்கையில் வெற்றி பெற எண் கணிதம் வழி காட்டினாலும ,மக்கள் மனக் கதவை  மூடி விடுகிறார்கள் . பாதி கிணற்றையே தாண்டுகிறார்கள்.  பின்பு கிணற்றில் விழுந்து விடுகிறார்கள்.

பின்னர் தங்களது  விதியின் மீது பழி போடுகிறார்கள் .எனவே நமது குழு நபர்கள் அனைவரும் தங்களது பெயர்களை சீர்திருத்தி ,வெற்றி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். 

அவர்களுக்கு PRONOLOGY
 மிகவும் உதவிகரமாக இருக்கும்.

வாழ்த்துக்கள் பல!
 நாளை சந்திப்போம்.


Friday, 4 September 2020

PRONOLOGY Initial முக்கியத்துவம்


PRONOLOGY

மக்களின் பெயர்களும் ,அவர்களின் இனிசியல் (INITIAL)முக்கியத்துவமும்..

பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது குழந்தையின் தந்தைப்  பெயரின் முதல் எழுத்தை  (இனிசியல்
 என்று சொல்வார்கள்) குறிப்பது வழக்கம்.  இந்த இனிசியல் மிக வலிமை வாய்ந்தது.

 ஏனெனில் அந்த குழந்தை வாழ்க்கையின் முதல் கட்டத்தில் ,இந்த இனிசியல் எழுத்தின் பலன்களையே அனுப்விக்க வேண்டியுள்ளது .உதாரணமாக
S KANTHAN 
 என்ற பெயரை எடுத்துக்கொள்வோம் 

இதில் முதல் எழுத்து S என்பது தந்தையாரின் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும். தந்தையாரின் பெயர் சண்முகம் ,சுப்பையா எது வேண்டுமானாலும் இருக்கலாம். இது குழந்தையின் பெயரில் S என்ற  எழுத்தாக முன்னாள் வருகிறது. இது நமது தமிழ் நாட்டின் கலாச்சாரம். 

ஆனால் கேரளா, ஆந்திரா மற்றும் வட நாடுகளில்   இனிசியல்  (INITIAL) குறிப்பிடப்படுவதில்லை. அவர்கள் தங்களது பெயரை   இனிசியலாகவும் தங்களது குலத்தின் பெயரை  பேராகவும் வைத்துக் கொள்கிறார்கள். 

உதாரணமாக

K P RAO, S A PAI 

இது நமது அண்டைய  மாநிலங்களில்  வைக்கும் பெயர்களாகும. இதில் K P  என்பது அக்குழந்தையின் பெயராகவும், RAO என்பது அக்குழந்தையின் இனமாகவும் இருக்கும். 

அதே போல் தான்  S A என்பதும் குழந்தையின் பெயர் ஆகும். PAI என்பது அவர் சார்ந்த இனத்தின் பெயராகும் .அவர்களின் பெயரை பற்றி இங்கு ஆராயவில்லை .நமது தமிழ்நாட்டில் எப்படி 
பெயர்கள் வைக்கப்படுகிறது என்பதைப்பற்றி 
ஆராய்வோம்.

இது முக்கியமான விஷயமாகும்  PRONOLOGY  யில் முக்கியமான கருத்தாகும். இதை  நன்கு புரிந்து கொள்ளவும் .

S KANTHAN 

இந்தப் பெயரை கவனியுங்கள்.
 பெயர் எண்ணானது  3+23==26. 26 வரும்.ஆனால் 
கந்தன் என்ற பெயர் 23 வருகிறது .இது நல்ல பெயர் எண்  ஆகும். சிறந்த அறிவு, ஆற்றல் ,நுணுக்கங்கள் எல்லாம் கொடுக்கும்
. மக்கள் செல்வாக்கை கொடுக்கும் .ஆனால் மொத்தமாக பார்க்கும் பொழுது 26 வருகிறது. இது மிகவும் தீய பலன்களைக் கொடுக்கும். 23 எணணின்  நற்பலன்களை 26 எண் கெடுத்துவிடுகிறது.
 எனவே இவர் வாழ்க்கையில் பிரச்சினையை சந்திக்க வேண்டியதாக உள்ளது. 

இவர் எவ்வளவு செய்தாலும் வெற்றி கிடைக்காது. இதை அறியாமல் அவரும் பெயரை  அப்படியே வைத்துக் கொண்டார் என்றால் ,வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். 

பெயரை கவனியுங்கள் . KAN என்பது  CAN எ ன்று ஒலிக்கப்படும் ஏனென்றால்  CAN என்றால், முடியும் ,ஜெயிக்க முடியும் என்று அர்த்தம். எனவே  அந்த ஒலி நல்ல ஆற்றலை கொடுக்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது .  ANT (எறும்பு):பெயரில் வரும் இவருக்கு  எறும்பின்  சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் கொடுக்கும் .எவ்வளவு வேலை இருந்தாலும் சலிக்காமல் செய்வார் .இறுதியில்  HAN  என்று  முடியும் என்று முடியும். இதுவும் CAN  என்பதை குறிக்கிறது 

எனவே KANTHAN  என்பவர்  பெரிய சாதனை செய்து வெற்றி பெறுவார் என்பது அர்த்தம். ஆனால்  S , இனிசியல் ஆக வருவதால் பெயரின் பலன்கள் மாறுபடுகிறது .
அதுமட்டுமல்ல
 பெயரின் முதல்  எழுத்தையும், அதாவது இனிசியல் மற்றும் பெயரின் முதல் எழுத்தையும் தனியே  எடுத்துக்கொள்ளுங்கள்.

S.K 

 இந்த இரண்டு எழுத்துக்களும் இணையும் பொழுது, SICK  என்று ஒலிக்கப்படும். இதனால்  நோய், உற்சாகமின்மை , செய் ட  முடியாமல் தடுமாறுதல் என்று அர்த்தமாகிறது. எனவே இவர்  தனது  முயற்சியில் வெற்றி அடைய முடியாமல் தவிக்க நேரிடும். மேலும் வேலை செய்தும் கெட்ட பெயர் வாங்க வேண்டியது உள்ளது. எனவே  S.KANTHAN  கந்தனின் பெயர் எண்  26 ஆகிவிடுகிறது. 

 இதுவே
G KANTHAN  இன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம் .அப்போதும் பெயர் என் 26 தான் வரும.
 இருந்தாலும் G K என்பது நல்ல பெயர் ஒலியாகும்
 இந்த பெயருடைய எண் 23   என்ற பெயரின்  நல்ல ஒலிகளை  இது அதிகரிக்க வைக்கும். 26ம்  எண்ணின் தீய பலன்கள் குறைத்துவிடும். எனவே பெயரின் இனிசியல் மிகவும் முக்கியமானது. 

பெரியரின்  முதல் எழுத்தும், INITIAL லும்   சரியாக இருக்க வேண்டும் .அப்போதுதான் பலன்கள் அதிகமாகும்.  மாறாக இருந்தால் , தீய பலன்களே கிடைக்கும்..

கீழ்க்கண்ட பெயர்களை கவனியுங்கள். இவர்கள் எத்தனை நல்ல பெயர் எண்ணில் வைத்தாலும், வாழ்க்கையில் சிரமப் படுவதையும் ,எதிர்நீச்சல் போடுவதையும் தவிர்க்க முடியாது.

S KAVIN
V KRISHNA
C KARTHIK
L SUBRAMANIAN
D ILANGOVAN
S HARITHA

போன்ற பெயர்களை கவனியுங்கள். இவர்களுடைய  INITIAL ம், முதல் எழுத்தும் சேரும்பொழுது 
SICK,WEAK,SICK.LOSS
DIE.SICK 

என்று எதிர்மறை  ஒலியாக இருப்பதால், இவர்கள் வாழ்க்கையில் சிரமங்களையும், கஷ்டங்களையும் சந்தித்தே ஆகவேண்டும்.

 இதை படிக்கும்  குழு அன்பர்கள் தங்களது பெயர்களை இந்த மாதிரி வராமல் வைத்துக்கொள்ள வேண்டும் .அப்படி இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும்.

வாழ்த்துக்கள்

நாளை சந்திப்போம்.

Wednesday, 2 September 2020

PRONOLOGY பெயர் ஒலிகளின் மகத்துவம்..


PRONOLOGY

பெயர் ஒலிகளின் மகத்துவம்...

எண்கணிதம் ஒரு அற்புதமான கலை. உங்கள் பெயரின், பெயர் எண்தான் அதன் யோகத்தை தீர்மானிக்கிறது என்று கூறுகிறது .ஆனால் பல நேரங்களில் நல்ல பெயர்எண்கள்  கூட நற்பலன்களைச் செய்வதில்லை.

நமது தமிழ்நாட்டில் நடந்த சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம். யாரையும்  குற்றம் சொல்ல வில்லை 
. அவர்களது பெயர்களே அவர்களது பிரச்சனைக்கு  காரணமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதுவும் தப்பு கண்டுபிடிப்பதற்கு  அல்ல. உண்மையை கண்டுபிடிப்பதற்கு ஆகும். 

தமிழ்நாட்டின் மிகப்பழமையான மடம்,  காஞ்சிபுரம் சங்கரமடம் ஆகும் .இது ஆதிசங்கரரால நிறுவப்பட்டது .

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு மடத்தின் தலைவர் திரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். உலக அளவில் நமது இந்துக்களின் பெருமை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.அக்காலத்தில்  உலக இந்து சமய மையம்  , அமெரிக்காவில் அவர் தலைமையில் தொடங்குவதாக இருந்தது. 

ஆனால் திடீரென  அரசியலில் குழப்பம் ஏற்பட்டு, அரசியல்வாதிகளால் பழி வாங்கப்பட்டு ,அவர்கள் சிறை  செல்ல நேர்ந்தது . மேலும் இளைய பீடாதிபதி திரு விஜயேந்திர சரஸ்வதி அவர்களும் சில காலம் சிறைக்குச் செல்ல நேர்ந்துவிட்டது. இதற்கு என்ன காரணம் ?

அவர்கள் பெயர்கள் நல்ல பெயர்  எண்ணில் இருந்தாலும், அவர்களது  பெயர்கள் அவர்களது வெற்றிக்கு ஒத்துழைக்கவில்லை. என்பதே உண்மை. 

அனைவருக்கும் மிகவும் வருத்தம் ஆகிவட்டது
அவரது பெயரின் 
 ஒலிகளை கவனியுங்கள்

JAYENDRA SARASWATI 

பெயரில்  JAY,RAY  என்று வருவதால் திடீரென புகழ் அடைந்தார். வளர்ச்சியும் கிடைத்தது. SARASWATI என்ற பெயர் அறிவு , பிரகாசத்தை (WISDOM POWER)கொடுக்கும் .இந்து மதத்தில்  அற்புத ஞானத்தை கொடுக்கும். 

எனவே அவர் புகழ்பெற்ற ஆன்மீகவாதியாக விளங்கினார் .ஆனால் பெயரில்" END "என்ற தீய ஒலி வருவதால், அவரால் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை. END  என்றால் முடிவு அல்லது தடை என்று பொருள் .

எனவே அவரது வெற்றி மிக்க ஆன்மீக பயணம் திடீரென தடை ஏற்பட்டது . இந்து மக்கள் அனைவரும் கவலைப்பட்டனர். தற்போது மீண்டும் பழைய புகழை அடைவதற்காக  பல முயற்சிகள்  செய்து வருகிறார் . ஆன்மீக விஷயங்களில் மிகவும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவரது பெயர் தடையாக உள்ளது .அதை  அவர் சிறிது மாற்றி கொண்டால் நிச்சயமாக அவர் பெரிய அளவில் பேசபபடுவார். பழைய புகழை அடையலாம்

மேலும் அவரது  இளையவரான திரு.
VIJAYENDRA SARASWATI அவர்களின்
பெயரை கவனியுங்கள். 

அவரது பெயரிலும் VIJAY மற்றும்  SARASWATI என்ற வலுவான ஆன்மீக ஒலிகள் இருப்பதால் ,அவர் புகழ் பெற்ற ஆன்மீக வாதியாக இருக்கிறார் .அவரும் ஆன்மீகப் பாதையில்,வளர்ச்சி அடைந்து வந்தார். 

ஆனால் அவரது பெயரில் உள்ள END என்ற தீய ஒலியானது  அவரின்  முன்னேற்றத்தை தடை செய்து விட்டது .அவரும் சிறை செல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது .எனவே அவர்களது  ஆன்மீக பணிகள் தடைப்பட்டன .

இப்போது, மேலும் தங்களது சேவையில் மேன்மையடய மிகவும் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அவரின்  பெயரானது பெரிய தடையாக அமர்ந்து ,முன்னேற்றத்தை தடுக்கிறது.

 இவரும் தனது பெயரை சிறிய மாற்றம் செய்தால் மிகப்பெரிய வளர்ச்சி யைஅடையலாம். நமது ஆன்மீக மடமும் மீண்டும் உலகப் புகழ் அடையலாம்.
 இது என்னுடைய பேராவல். 

இதை எப்படி அவரிடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை .எனினும் அவர்களின் முன்னேற்றத்தில் நான் மிகவும்  ஆர்வமாக இருக்கிறேன்.

இதேபோலத்தான் RAJENDRAN ராஜேந்திரன் ,JAYENDRAN,ஜெயேந்திரன்,NAGENDRAN நாகேந்திரன் , SURENDRAN சுரேந்திரன் போன்ற பெயர்களுடைய  அன்பர்கள், தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத தடைகளை சந்திக்கிறார்கள் .தனது பெயரர் எண்ணை‌ மாற்றி வெற்றியடைய முயற்சிக்கிறார்கள்.ஓரளவு  முன்னேற்றத்தை அடைந்தாலும், முழுமையான வெற்றிகளை அடைய முடியவில்லை . அவர்களும்  PRONOLOGY சாஸ்திரம் மூலம் பெயரை சீரமைத்துக் கொண்டால் தடைகளை மீறி வெற்றி பெறலாம் .

வாழ்த்துக்கள்.
நாளை சந்திப்போம்..

Monday, 31 August 2020

PRONOLOGY பெயர்களின் முக்கியத்துவம்

PRONOLOGY

பெயர்களின் முக்கியத்துவம்

நமது குழுவில் இணைந்துள்ள அனைத்து அன்பர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

நமது குழு உறுப்பினர் திரு இளங்கோவன் அவர்கள் தனது  பெயர் சரியாக உள்ளதா ? பிறந்த தேதிக்கும்  பெயர் சரியாக இருக்கிறதா ?என்று கேள்வி கேட்டிருந்தார்.

 அவரது கேள்விக்கான பதிலை பார்ப்போம்
 
அவரது பெயர்M ILANGOVAN 
 பெயர் எண் 36

இவர் பெயர் பிறந்த தேதி
3. 7 ‌1967 ஆகும்.
பிறந்த தேதி எண்கள்

3. & 6 வருகிறது.

இவரது வயது 53 வ 1 மா 28 நாள்..

மூன்றாம் தேதி பிறந்துள்ளதால் நல்ல அறிவும், திறமையும் உடையவர். தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்வார் .

பொறியியல் கணிதம் விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநராக இருப்பார். கலைகளில் 
ஈடுபாடு இருக்கும் படிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர் .எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார். இவரது அறிவுத்தகம்  தீராது.

தன்னுடைய வேலையில் மிகுந்த கவனமாக இருப்பார். வேலைக்கு செல்பவராக இருந்தால் முதலாளிக்கு மிகவும் நாணயமான வராகவும் இருப்பார் 

வியாபாரம் செய்யும் பொழுது மிகுந்த நாணயமாக விற்பார்.  உண்மையை   சொல்லி விற்பவராகவும் இருப்பார். .அதிக லாபம் குவிக்க மனது வராது .பொதுவாக நல்லவர் என்று பெயர் எடுப்பார். 

பொருளாதார விஷயத்தில் அளவான முன்னேற்றமே  உண்டு .விதி எண் 6 வருவதால் பணம் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருப்பார். வாழ்க்கை வசதிகள் அமைந்விடும்.ஏதாவது ஒரு னக்குறை இருக்கும

கலைகளில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தின் மீது பாசம் இருக்கும். ஆனால் பிறந்த தேதிகள் மூன்றுக்கு விதி எண் 6 பகையாக வருவதால், படிப்பில் தடை அல்லது எதிர்பாராத படிப்பில் சேர்ந்திருப்பார் .தொழிலும் அப்படித்தான் எதிர்பார்த்த தொழில் கிடைக்காது .மேலும் தொழில் விஷயத்தில்  திருப்தி கிடைக்காது. இவர் நினைப்பதற்கு மாறாகவே காரியங்கள் சென்றுகொண்டிருக்கும். 

இவரது பெயர் எண் 36 வருகிறது . இவரது பிறந்த தேதி எண்களுக்கு 36 நல்லதுதான். இருந்தாலும் பல  வகைகளில் ஏமாற்றப்படுவார். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெளியூரில் முன்னேற்றம் கிடைக்கு ம். 

இளங்கோவன் என்ற பெயர் 
சுமாரான பெயராகும். ஏதாவது ஒரு வலி, உடல் பிரச்சினைகள் இருககும்.
 
ஏற்கனவே  இவர் பல வேலைகளை செய்து தனது அதிர்ஷ்டத்தை  சோதித்திருப்பார் .இவர் தகுந்த வேலையை தேர்ந்தெடுத்து விட்டால் 
வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். 
வாழ்த்துக்கள் 
.
பிறந்த தேதி தேதி எண்கள் எதிரிடையாக இருப்பதால் , வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவதாக இருக்கும்.இவரது பெயரை சிறிது மாற்றினால் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள்
நாளை சந்திப்போம்.


Saturday, 29 August 2020

PRONOLOGY__ தெய்வத்தின் பெயர்கள் ஒரு ஆய்வு.


PRONOLOGY

தெய்வங்களின் பெயர்கள் ஒரு ஆய்வு...

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்திகளின் பெயர்களைப்  பற்றியும் அவர்களின் தொழில் பற்றியும் விளக்கியிருந்தேன் .  இப்போது மேலும் சில பெயர்களைப் பார்ப்போம். 

கல்வி ,செல்வம், வீரம் இந்த மூன்று முக்கிய கடமைகளுக்கு மூன்று தெய்வங்களை பெரியவர்கள் கொடுத்துள்ளார்கள். 

அதற்கு காரணம் என்ன? நமது முன்னோர்கள் காரணம் இல்லாமல்  எதையும் செய்வதில்லை என்று நம்புங்கள்.

கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி என்பார்கள். தேவி என்பது பட்டப்பெயர் .அவரது பெயர் சரஸ்வதி தான். அவரை ஏன் கல்விக்கு அதிபதியாக நினைத்தாரகள்.

 அதற்கு ஏதாவது காரணம் உள்ளதா என்று ஆராய்வோம்

சரஸ்வதியின் பெயரை கவனியுங்கள்
SARASWATHI என்ற  இந்தப் பெயரின் பெயர் எண் 27 வருகிறது. 27 மிகச்சிறந்த எண்தான்.  27 தைரியத்தை கொடுக்கக்கூடிய ஒரு எண். 

எனவே 27 எண்ணிற்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்லை. பிறகு எந்த காரணம் கொண்டு சரஸ்வதிக்கு கல்வி என்ற முக்கியமான கடமையைக்  கொடுத்தார்கள்.

SARASWATHI  என்பது PRONOLOGY படி  SA+RAS,+WAT+ HI  என்ற ஒலிகளாக பிரிக்கிறது

.இது PRONOLOGY மில் 
SAY + RAYS + WHAT+ HIGH 
என்று  ஒலிக்கப்படுகிறது 
அதாவது SAY  என்றால் பேச்சு என்று பொருள். எனவே சரஸ்வதி தேவி அவர்கள் பேச்சுக்கு  அதிபதியாக உள்ளார்
RAYS என்றால்  பிரகாசம் என்று பொருள். கல்வியின் பிரகாசத்திற்கு, வெற்றிக்கு சரஸ்வதியே  காரணமாக இருக்கிறார் என்று பொருளாகிறது. மேலும் WHAT என்பது கேள்வி கேட்பது என்பதை  குறிக்கும். HIGH என்பது நிறைய கேள்விகளை கேட்பது என்று பொருள்.. இதை தமிழில் கேள்வி ஞானம் எனலாம் .

அறிவுக்கு அடிப்படை கேள்வி ஞானம்தான். இதனால்தான் சரஸ்வதி தேவியை சொல்லுக்கும், ,கல்விக்கும் அதிபதியாக சொல்லப்பட்டுள்ளது .

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லும்வலிமை மிக்கது
 பலனை அளிக்கக்கூடியது எனவே சரஸ்வதியின் தொழில் கல்வி என்பது காரணப் பெயரே ஆகும். 

மேலும் பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு அறிவும் ஞானமும் தேவை.  எனவேதான் கல்விக்கும் அறிவுக்கும் ,ஞானத்துக்கும் அதிபதியான சரஸ்வதி தேவியை பிரம்மாவுக்கு துணையாக படைத்தார்கள் .

அவர்களின் ஞானத்தை பாராட்டியாக வேண்டும் அல்லவா.
 நாளை சந்திப்போம்..

Thursday, 13 August 2020

PRONOLOGY உருவாக்கியது எப்படி?


PRONOLOGY உருவானது  எப்படி?

நான் விவசாயக் கல்லூரியில் (B.E.Ag.)படித்த காலத்திலேயே (1977) ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டு படித்தேன்.எண்கணித்திலும்  ஈடுபாடு கொண்டு  பயின்றேன். 

 இதன் மூலம் நண்பர்களுக்கும்,  ஆர்வத்துடன் தேடி வந்தவர்களுக்கும்   எண்கணிதம் மூலம் பெயர் மாற்றிக் கொடுத்தேன். இதனால் பலர் வெற்றி பெற்றார்கள். சிலர்  வெற்றி பெறமுடியவில்லை.

குறிப்பிட்ட பிறந்த தேதியில் பிறந்தவர்களுக்கு ,  நல்ல எண்ணில்  பெயர் வைத்து கொடுத்தாலும் ,பலவித காரணங்களால் அவருக்கு நல்ல பலன்களை அடைய முடியாமல் போய்விட்டது. 

எனது பெயர் மாற்றம் அவர்களுக்கு  நன்மை செய்ய வில்லையே  என்ற கவலையில், தீவிரமாக  ஆராய்ந்தேன். அதற்கான காரணங்கள் என்ன ?இந்த அடிப்படை எண்களுக்கு (பிறவி எண் ,விதி எண் ) இந்த பெயர் எண்ணில் தான் பெயர் வைக்க வேண்டும் என்றும் எண்கணிதம் கூறுகிறதே என தீவிரமாக ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.


பெயர்களை பற்றிய ஆராய்ச்சிகளில்  பத்து வருடங்களுக்கு மேல்  ஈடுபட்டேன். பல ஆயிரம் பெயர்களை ஆராய்ந்தேன். மனைவியின் வசவுகளைப் பாராமல், இறைவனை வேண்டி எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன் .அப்போதுதான் எதார்த்தமாக ON,NO  என்ற சொற்களை ஆராய வேண்டி வந்தது .அப்போதுதான்  இறைவன்  வழியை காட்டினார் .
இதன்மூலம் PRONOLOGY  கலை உருவானது. இதற்கு  குருவருளும் திருவருளும் தான் காரணம்.

என்னை மிகவும் சிந்திக்க வைத்த  விஷயம்
இதுதான். ஆங்கிலத்தில் O,N என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளன. இது இரண்டு விதமாக இணையும்.

 ஒன்று  ON ,இன்னொன்று NO . இவற்றின் எண் மதிப்பை  பார்க்கும்போது,இரண்டும் 12  (5+7)தான் வரும் .ஆனால் ON என்பது  நேர்மறை ஒலியையும் .NO  என்பது எதிரிடையான ஒலியையும் குறிக்கும் 
இந்த  ஒலிகளின் பலன்களை பெயர்களில் பொருத்திப்பார்த்தேன். மிகவும் அற்புதமாக ஒத்துப் போனது.

 இது மட்டுமல்ல நாடுகளின் பெயர்கள் , புராணங்களில் வரும் பெயர்கள், சுற்றியுள்ள மக்களின் பெயர்கள்... இப்படி எல்லாவற்றையும்  ஆராய்ந்து பார்க்கும் பொழுது ,மிகப்பெரிய உண்மை புலப்பட்டது .இதுவரையிலும் ,ஒலிகளைப் பற்றி யாரும் ஆராயவில்லை.
 எனவே  ஒலிகளை மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து  PRONOLOGY கலையை ,இன்று ஒரு முழு அளவிலான சாஸ்திரமாக உருவாக்கியுள்ளேன் .

பெயர் எழுத்துக்கான  வயது 
விபரங்கள் ,
எழுத்துக்களுக்கான காலம், மேலும் , பெயர்களின்  மூலம் திருமண பொருத்தம் ,மேலும் பெயர்களின் 
ஜாதகம் (NAME CHART) இவைகளை யெல்லாம் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடித்தேன் முழுமையான சாஸ்திரமாக உருவாக்கியுள்ளேன்.. . 

இந்த புத்தகங்களை வெளியிடுவதற்காக பல பதிப்பகங்கள்  சென்றேன். அனைவரும் முதலில் மறுத்தனர் .பின்பு அவர்களின் பெயர்களின் பலன்களை  கூறும் பொழுது, அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு , இந்த புத்தகங்களை வெளியிடுகிறோம் என்று கூறினார்கள். இன்று  PRONOLOGY  புத்தகம் பல பதிப்புகள் வந்துவிட்டன .

மேலும் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. எண் கணிதம்  எதிர்பார்த்த பலன்களை கொடுப்பதில்லை   என்பதற்கான  விளக்கங்களை இது கூறுகிறது .இது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒரு PRONOLOGY துறையில் குஜராத் பல்கலைக்கழகம் எனக்கு முனைவர் என்ற பட்டத்தை வழங்கி உள்ளது

எண்கணிதம் எண்கள் கொண்டு மட்டுமே அமைக்கும் பெயர்கள் பாதி  வெற்றியைத்தான்  தரும். ஆனால் நியூமராலஜி மற்றும்  புரோனலஜி  கொண்டு அமைக்கப்படும்  பெயர்கள்  நிச்சயம்  முழு (95%)பலன்களைத் தரும்.